அமெரிக்காவில் டேட்டிங் ஆப் மூலம் பெண்களிடம் பேசி 20 ஆயிரம் டொலருக்கும் மேலாக பண மோசடி செய்துள்ள நபரின் செயல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நியூயார்க்கின் மோசமான காதலன்
அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த நெல்சன் கவுன் என்ற நபர் டேட்டிங் ஆப்பை பயன்படுத்தி பல பெண்களோடு இணையத்தில் அரட்டை அடித்துள்ளார்.
மேலும் அவர்களை சந்தித்து ஆசை வலையில் சிக்க வைத்து அவர்களிடம் எதையாவது காரணம் கூறி பணம் பறித்துள்ளார். தனது பெயரை மாற்றியதோடு மட்டுமில்லாமல் தனது வயதையும் குறைத்து கூறி பல பெண்களை ஏமாற்றியுள்ளார்.
@istock
அவரிடம் ஏமாந்து போன பெண் ஒருவர் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் “அவர் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும், அவர் பணத்திற்காக பெண்களை மோசமாக ஏமாற்றியுள்ளார்” என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பொய்களின் மன்னன்
நெல்சன் தான் வியட்நாம் போர் வீரன் என்றும், ஓவியங்களை விற்பனை செய்பவர் எனவும், தனக்கு கேன்சர் இருப்பதாகவும் கூறி பெண்களிடம் பணம் மோசடி செய்வதாக அவரிடம் ஏமாந்த பெண் தெரிவித்துள்ளார்.
49 வயதுடைய பெண் கடந்த 2000 ஆம் ஆண்டு நெல்சனை நியூயார்க்கிலுள்ள இத்தாலியன் உணவகத்தில் சந்தித்து இருக்கிறார். அந்த பெண் ஏற்கனவே முறிந்து போன காதல் தோல்வியிலிருந்து மீள இவரோடு பேசியுள்ளார்.
”நான் அவரது தோற்றத்தில் மயங்கினேன். அவர் மிகவும் அழகாக இருந்தார்” என அந்த பெண் கூறியுள்ளார்.
@bloomberg
வியட்நாம் போரில் பணியாற்றியதால் நான் மென்மையான இதயத்தை கொண்டவன் என பொய் சொல்வது மற்றும் பெண்களிடம் எப்படியெல்லாம் பணம் பறிக்க முடியுமா அப்படியெல்லாம் மோசடி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
“ அவர் மிகவும் இனிமையாகப் பேசுவார்” என்ற கிரிஸ்டி” தான் தொழில் தொடங்க உள்ளேன். அதற்கு உன்னுடைய முதலீடு தேவைப் படுகிறது எனக்கூறி அதில் கிடைக்கும் லாபத்தை இரட்டிப்பாக தருகிறேன் என என்னிடம் 5000 டொலர் ஏமாற்றினார்” என கூறியுள்ளார்.
@gettyimages
நெல்சன் கவுன் தற்போது கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். மேலும் அவர் கடந்த 2012 முதல் தற்போது வரை கிட்ட தட்ட ஐந்து பெண்களிடம் 21 ஆயிரம் டொலர் வரை மோசடி செய்துள்ளார்.