வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
டெல் அவிவ்-இஸ்ரேலில் நீதித் துறையில் மறுசீரமைப்பை உருவாக்கும் சர்ச்சைக்குரிய சட்டங்களில் முதல் சட்டம், அந்நாட்டு பார்லிமென்டில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
மேற்காசிய நாடான இஸ்ரேலில் நீதித் துறையின் அதிகாரத்தை கட்டுப்படுத்தவும், நீதித்துறை அதிகாரத்திற்கும், அரசாங்கத்தின் அதிகாரத்திற்கும் இடையே சம நிலையை மீட்டெடுக்கவும், நீதித் துறையில் மாற்றம் கொண்டுவர இருப்பதாக அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார்.
‘இது, ஜனநாயகத்துக்கு எதிரான செயல்’ என குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும், இஸ்ரேல் மக்களும் போராட்டத்தில் குதித்தனர்.
போராட்டம்
இஸ்ரேல் அரசின் முடிவை எதிர்த்து, 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கடந்த சில வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இது, அந்நாட்டில் வரலாறு காணாத வகையில் மிகப் பெரிய போராட்டமாக உருவெடுத்துள்ளது.
மக்கள் போராட்டத்துக்கு இடையே, நீதித் துறையில் மறுசீரமைப்பை உருவாக்கும் சர்ச்சைக்குரிய சட்டங்களில் முதல் சட்டம், அந்நாட்டு பார்லிமென்டில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
விமர்சகர்கள் கருத்து
‘ஊழல் வழக்குகள், நீதித் துறையில் மறுசீரமைப்பு நடவடிக்கை ஆகியவற்றை காரணம் காட்டி, நெதன்யாகுவை ஆட்சி செய்ய தகுதியற்றவர் என நீதிமன்றம் பதவி நீக்கம் செய்ய முடியாதபடி, இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது’ என, சட்ட விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement