டெல்லி: சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு உள்ளிட்ட அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 14 கட்சிகள் மனு அளித்துள்ளனர். சிபிஐ, அமலாக்கப்பிரிவை தவறாக பயன்படுத்தி எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்வதை தடுத்து நிறுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையில் திமுக, ஆர்ஜேடி, பிஆர்எஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.