எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 3 புதிய ரீசார்ஜ் திட்டங்களை கிரிக்கெட் ரசிகர்களுக்காக அறிவித்துள்ளது. அதில் 2023 ஐபில் போட்டிகளை நமது ஸ்மார்ட்போன்கள் மூலமாக எந்த ஒரு டேட்டா பற்றிய கவலையும் இன்றி பார்க்க வழிசெய்துள்ளது. ‘Jio Cricket Plan’ என்று அழைக்கப்படும் அது ஒரு நாளைக்கு 3GB data மற்றும் கூடுதல் டேட்டா வவுச்சர் வழங்குகிறது. இதனால் நாம் தடையின்றி ஐபில் போட்டிகளை காணமுடியும்.
ஜியோ 999 திட்டம்
இந்த திட்டம் மூலமாக நாம் ஒரு நாளைக்கு 3GB டேட்டா மற்றும் அன்லிமிடெட் காலிங் வசதி பெறலாம். இதில் நமக்கு 241 ரூபாய் மதிப்பிலான வவுச்சர் இலவசமாக கிடைக்கும். அதில் 40GB டேட்டா நாம் பயன்படுத்தலாம். இந்த திட்டம் மொத்தமாக 84 நாட்கள் மதிப்புடையது.
ஜியோ 399 மற்றும் 219 ரூபாய் திட்டம்
இந்த இரு திட்டங்களிலும் 3GB டேட்டா ஒரு நாளைக்கு கிடைக்கும். இதன் 399 ரூபாய் திட்டத்தில் 61 ரூபாய் மதிப்பிலான வவுச்சர் கிடைக்கும். அதில் 6GB கூடுதல் டேட்டா நமக்கு கிடைக்கிறது. இது 28 நாட்கள் மதிப்புடையது. இதன் 219 ரூபாய் திட்டம் 14 நாட்கள் மதிப்புடையது. அதில் நமக்கு கூடுதலாக 2GB டேட்டா கிடைக்கும். இந்த திட்டங்கள் வரும் மார்ச் 24 முதல் கிடைக்கும்.
Cricket addon plans
ரூபாய் 222 செலுத்தினால் நமக்கு 50GB டேட்டா கூடுதலாக கிடைக்கும். அது உங்களின் தற்போதைய திட்டத்தின் கால அளவு வரை நீடிக்கும். ரூபாய் 444 செலுத்தினால் 100GB டேட்டா கிடைக்கும். இது 60 நாட்கள் மட்டுமே இருக்கும். ரூபாய் 667 செலுத்தினால் 150GB டேட்டா கிடைக்கும். அது 90 நாட்கள் மட்டுமே நீடிக்கும்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்