எக்காலத்திலும் தேர்தல் கூட்டணி வைக்கமாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கும்
சீமான் பாஜகவை வீழ்த்துவதற்காக அந்த நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள தயாராக இருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. இந்தியாவில் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. சனாதனத்தை வீழ்த்த வலுவான முற்போக்கு கூட்டணி ஒன்று சேர வேண்டும் என்று இடது சாரி கட்சிகள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதுமுள்ள எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும்
கூட்டணி கட்சிகள் விரும்புகின்றனர். இந்த வரிசையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் வந்திறங்கியுள்ளார். அவ்வாறு நடந்தால் பாராளுமன்ற தேர்தலில் பாஜக மிகப்பெரிய சரிவை சந்திக்கும் என்பதில் சந்தேகமில்லை.
திருச்சியில் நேற்று பேட்டியளித்த
” நாங்கள் தேர்தல்களில் தனித்து தான் போட்டியிடுவோம் என்றும் இதுவரை நடந்த தேர்தலில் நாங்கள் தோற்கவில்லை மக்கள் தான் தொடர்ந்து தோல்வி அடைந்து கொண்டு இருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து அவரிடம் பாராளுமன்ற தேர்தலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், 2024 தேர்தலில் பாஜகவை வீழ்த்த நாடு முழுவதும் உள்ள மாநில கட்சிகள் ஒன்றிணைந்து மாற்று அணியை உருவாக்க வேண்டும் என கூறினார். மேலும், கடந்த பாராளுமன்ற தேர்தலில் இதேபோல ஒரு அணியை உருவாக்கினார்கள் ஆனால், தேர்தலுக்கு முன்னரே ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என ஸ்டாலின் அறிவித்துவிட்டார். அவர் செய்த தவறால், அந்தக் கூட்டணி சிதறி போனது. தற்போது, மீண்டும் வரும் பாராளுமன்ற தேர்தலில் அதுபோல ஒரு மாற்று அணியை உருவாக்க முயற்சிக்க வேண்டும் என்றார்.
ஒருவேளை மாற்று அணி வந்தால் அதில் கூட்டணி அமைப்பீர்களா என்று சீமானிடம் கேள்வி எழுப்பினர். அத்தகு அவர், மாற்று அணி வந்தாலும் நாங்கள் தனித்துதான் போட்டியிடுவோம். இருப்பினும், அப்படி ஒரு சூழல் வந்தால் அந்த நேரத்தில் கூட்டணியில் சேரலாமா என்பது குறித்து சிந்திப்போம் என சீமான் கூறினார்.
நாம் தமிழர் கட்சி பாஜகவின் ‘பி’ டீம் என்று தேர்தல் நேரங்களில் திமுகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், பாஜகவுக்கு ஏதிராக மாற்று அணி உருவாக்கப்பட்டால் அதில் நாம் தமிழர் கட்சி கூட்டணி அமைப்பதை பற்றி சிந்திக்கும் என்று கூட்டணிக்கு பச்சை கொடி காட்டியுள்ள சீமானை திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் பயன்படுத்திக்கொள்ளுமா என்பதை பார்க்கலாம்.
மேலும், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் திருமாவளவனும் நாம் தமிழர் கட்சி ஏதேனும் கட்சியில் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதையே விரும்புகிறார். இந்த நிலையில் திருமாவளவன் சொல்வதை போல சனாதன சக்தியை அழிக்க மாற்று அணி உருவாகி அதில் நாம் தமிழர் இணைந்தால் விடுதலை சிறுத்தைகள் அந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.