வசூல் மழையில் வாரிசு கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் மற்றும் வம்சியின் கூட்டணியில் வாரிசு திரைப்படம் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. மேலும் இப்படத்துடன் அஜித்தின் துணிவு திரைப்படம் வெளியாகி அப்படம் பாஸிட்டிவ் விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் வாரிசு திரைப்படத்தை குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் பார்த்ததால் படத்தின் வசூல் மலமடங்கு உயர்ந்தது. முதல் வாரத்தில் துணிவு திரைப்படமே வசூலில் முன்னிலையில் இருந்தாலும் அதன் பிறகு வாரிசு படத்தின் வசூல் வேகமெடுக்க துவங்கியது. இறுதியில் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு வசூலில் மிகப்பெரிய சாதனையை படைத்தது வாரிசு திரைப்படம்
லியோ வாரிசு படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகின்றார் விஜய். கமல்ஹாசனின் விக்ரம் படத்தை போல இப்படத்தையும் முழுக்க முழுக்க லோகேஷ் தன் ஸ்டைலில் உருவாக்கயிருப்பதால் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு உயர்ந்தது. மேலும் இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் படத்திலிருந்து வெளியான ப்ரோமோ மற்றும் போஸ்டர்கள் என அனைத்தும் ரசிகர்களிடம் அமோகமான வரவேற்பை பெற்று வருகின்றது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் வெளியாகி வசூலில் சாதனை படைத்தது. இதையடுத்து தற்போது உருவாகிவரும் லியோ திரைப்படத்தின் மூலம் ஆயிரம் கோடி வசூலை எட்ட படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் இப்படத்தின் பூஜை துவங்கும் முன்பே பலகோடிக்கு வியாபாரமாகியுள்ளதால் கண்டிப்பாக இப்படம் ஆயிரம் கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது
முடிந்தது காஷ்மீர் படப்பிடிப்பு இந்நிலையில் லியோ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக நடைபெற்று வந்தது. இதைத்தொடர்ந்து தற்போது இப்படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. இதையொட்டி காஷ்மீரில் படக்குழு சந்தித்த சவால்கள் பற்றியும், அவர்களின் உழைப்பை பற்றியும் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை அசத்தியுள்ளனர் படக்குழுவினர். இந்த வீடியோ தான் தற்போது சமூகத்தளங்களில் செம வைரலாகி வருகின்றது. இதற்கடுத்து லியோ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் விரைவில் நடைபெற இருக்கின்றது. இப்படப்பிடிப்பில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலி கான் ஆகியோரும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது
கடுப்பான தளபதி இந்நிலையில் விஜய் நடிப்பில் வெளியான திருமலை படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குனர் விஜய்யிடம் சொல்லாமல் நாயகியை மாற்றியதால் விஜய் உச்சகட்ட கோபத்திற்கு ஆளானதாக தகவல் வந்துள்ளது. ரமணா இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் தான் திருமலை. இப்படத்தில் ஜோதிகா நாயகியாக நடித்திருந்தார். ஆனால் முதல் முதலில் இப்படத்தில் நம்ரதா தான் நாயகியாக நடித்தாராம். இவர் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவின் மனைவி ஆவார். சில நாட்கள் நம்ரதா திருமலை படத்தில் நடித்ததை அடுத்து இயக்குனர் ரமணாவிற்கு திருப்தி ஏற்படவில்லையாம். என்னதான் நம்ரதா நன்றாக நடித்தாலும் அக்கதாபாத்திரத்திற்கு செட்டாகாமலே இருந்தாராம். இதையடுத்து தான் நம்ரதாவிற்கு பதிலாக ஜோதிகாவை திருமலை படத்தில் பல போராட்டங்களுக்கு பிறகு கமிட் செய்துள்ளார் ரமணா. இதை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் கூறிய ரமணா விஜய்யிடம் கூறாமல் விட்டுவிட்டார். இதையடுத்து படப்பிடிப்பு தளத்திற்கு வந்த விஜய்யிடம் ரமணா நாயகியை மாற்றிவிட்டதாக கூறியுள்ளார். இதைக்கேட்டு டென்ஷனான விஜய் காரை எடுத்துக்கொண்டு படப்பிடிப்பு தளத்தை விட்டு வெளியேறிவிட்டாராம்.பின்பு ஒரு மணி நேரம் கழித்து படப்பிடிப்பிற்கு வந்த விஜய் நார்மலாகி படப்பிடிப்பில் கலந்துகொண்டார் என இயக்குனர் ரமணா தெரிவித்துள்ளார்