கடந்த மார்ச் 20ஆம் தேதி சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது இல்ல பரிசுகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வரும் செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது மேலும் இந்த உரிமை தொகையானது தகுதியின் அடிப்படையில் தான் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் வாக்குறுதியின் போது அனைவருக்கும் உரிமை தொகை வழங்குவதாக தெரிவித்து இப்போது தகுதியின் அடிப்படையில் வழங்கப்படும் என்று பட்ஜெட் வெளியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
இந்த நிலையில் இது குறித்து அமைச்சர் எ.வ. வேலு பேசிய போது, ” தகுதி கொண்ட குடும்ப தலைவவிகளுக்கு மட்டும் தான் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று திமுக கூறியதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை.
ரேஷன் அட்டை இருக்கிறது என்ற காரணத்திற்காக வசதி படைத்தவர்களுக்கு உரிமை தொகையை கொடுக்க வேண்டியது அவசியம் கிடையாது. முதல்வர் மு க ஸ்டாலின் செப்டம்பர் மாதம் முதல் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறி இருக்கிறார். அதற்கு இன்னும் 3 மாதங்கள் இருக்கின்றன. இந்த மூன்று மாதங்களில் தகுதியுள்ள இல்லத்தரசிகளின் பட்டியல் தயாராகிவிடும்.” என்று தெரிவித்துள்ளார்.