டெல்லி: மத்திய புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டி காங்கிரஸ் திமுக 14 எதிர்க்கட்சிகள் இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. இந்த இரு வாரத்திற்குள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் இரண்டு முன்னாள் அமைச்சர்கள் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். அதேபோல் தெலங்கானா முதல்வரின் மகள் கவிதாவும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வியும் மத்தியப் புலனாய்வு அமைப்புகளின் விசாரணை வளையத்தில் சிக்கி உள்ளனர். […]