மதுரை: புதுச்சேரியில் உள்ள கல்லூரியில் துணைவேந்தர் பதவி வாங்கித் தருவதாக ரூ.95 லட்சம் மோசடி செய்ததாக வழக்கின் விசாரணையை பொருளாதார குற்றப் பிரிவு விசாரணைக்கு மாற்றக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. மனுதாரரின் குற்றச்சாட்டு தீவிரமானது என்பதால் புதிய புகார் மனுவை ராமநாதபுரம் எஸ்.பி.யிடம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புகார் மனு மீது ராமநாதபுரம் எஸ்.பி. நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.