கோவையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று! RT-PCR பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டன

Increasing Coronavirus Cases In Tamil Nadu: இந்தியாவில் திடீரென மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓமிக்ரான் வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. கோவையில் 4% சதவீதம் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 100 கடந்தது. தமிழகத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாக கொரோனா தொற்று பாதிப்பு மிகவும் குறைந்திருந்தது. 

இதனால் தீவிர காய்ச்சல் பாதிப்பு கொரோனா தொற்று அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு மட்டுமே கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்கள் ஆக மாநிலம் முழுவதும் இன்ஃப்ளுயன்ஸா காய்ச்சல் பாதிப்பு பரவத் தொடங்கியது. இதை அடுத்து காய்ச்சல் பரிசோதனை அதிகரிக்க மாநில அரசு சார்பில் சுகாதாரத்துறை அறிவுறுத்தப்பட்டது.

நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைத்து ஊரகப் பகுதிகளில் காய்ச்சல் முகாம்களை நடத்தி பரிசோதனைகளை அதிகரிக்கவும் அறிவிக்கப்பட்டது. 

அதன்படி கோவையில் 40 நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு நாள்தோறும் 100 மருத்துவ முகாம்கள் வரை நடத்தப்படுகிறது. இதன் மூலம் கொரோனோ  பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டு உள்ளன.

குறிப்பாக கோவையில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் நோய் தொற்று பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 20 கடந்து உள்ளது. கடந்த மார்ச் 15 ஆம் தேதி 1 சதவீதமாக இருந்த கொரோனா நோய் தொற்று பரவல் தற்பொழுது 4 சதவீதமாக அதிகரித்து உள்ளது. 

மேலும் கொரனோ நோய் தொற்று சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 129 ஆக உயர்ந்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை கோவை மாவட்டத்தில் மட்டும் 100 ஐ  கடந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய தொற்றுடன் தினசரி கொரோனா பரவல் விகிதம் 1.09 சதவீதமாகவும், வாராந்திர கொரோனா பரவல் விகிதம் 0.98 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. நாட்டில் H3N2 இன்ஃப்ளூயன்ஸா தொற்று அதிகரிப்புக்கு மத்தியில், கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. 

இந்தியாவில் மரபணு வரிசைமுறையில் கொரோனாவின் பல்வேறு மாறுபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதங்களில், மற்ற அனைத்து வகைகளின் பாதிப்புகளும் குறைந்து வருகின்றன, அதே நேரத்தில் கொரோனா XBB.1.16 இன் இந்த மாறுபாட்டின் பாதிப்புகள் தொடர்ந்து வேகமாக அதிகரித்துள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.