எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
அஜித் குமாரின் தந்தை பி. சுப்ரமணியம் இன்று காலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 85. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு படுத்த படுக்கையாக இருந்தார்.
இந்நிலையில் இன்று காலை தூக்கத்திலேயே அவரின் உயிர் பிரிந்துவிட்டது. சுப்ரமணியம் இறந்த செய்தி அறிந்த பிரபலங்கள், ரசிகர்கள், முதல்வர் மு.க. ஸ்டாலின் என பலரும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை சமூக வலைதளத்தில் தெரிவித்தார்கள்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா உள்ளிட்ட பிரபலங்கள் அஜித்தின் வீட்டிற்கு சென்று அவரின் அப்பாவுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
அஜித் வீட்டிற்கு தளபதி விஜய்யும் சென்று ஆறுதல் கூறியிருக்கிறார். அவர் அஜித் வீட்டிற்கு காரில் வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியிருக்கிறது.
அஜித்தும், விஜய்யும் நல்ல நண்பர்கள் ஆவர். அவர்கள் மட்டும் இல்லை அவர்களின் குடும்பத்தாரும் நட்பாக பழகி வருகிறார்கள். இந்நிலையில் தான் நண்பர் அஜித்துக்கு ஏற்பட்டிருக்கும் பேரிழப்பு குறித்து அறிந்தவுடனேயே நேரில் பார்க்க சென்றுவிட்டார் விஜய்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார் விஜய். காஷ்மீரில் படப்பிடிப்பு நடந்தது. நேற்று தான் படக்குழு சென்னை திரும்பியது என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இதற்கிடையே அஜித் மற்றும் சகோதரர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
எங்களது தந்தையார் திரு. பி.எஸ். மணி(85 வயது) அவர்கள் பல நாட்களாக உடல்நலமின்றி படுக்கையில் இருந்து வந்தார். இன்று அதிகாலை தன்னுடைய தூக்கத்தில் உயிர் நீத்தார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தந்தையை அன்போடும், அக்கறையோடும் கவனித்து வந்தும், எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவர்களுக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
எங்கள் தந்தையார் சுமார் அறுபது ஆண்டு காலமாக எங்கள் தாயின் அன்போடும், அற்பணிப்போடும் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.
இந்த துயர நேரத்தில் பலர் எங்கள் தந்தையாரின் இறப்பு செய்தியை பற்றி விசாரிக்கவும், எங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காகவும் எங்களை தொலைபேசியிலோ, கைபேசியிலோ அழைப்பு விடுத்தோ அல்லது குறுந்தகவல் அனுப்பியோ விசாரித்து வருகின்றனர்.
Ajith: பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அப்பா தூக்கத்தில் இறந்தார்: அஜித், சகோதரர்கள் அறிக்கை
தற்போதுள்ள சூழலில் எங்களால் உங்கள் அழைப்பை மேற்கொள்வதற்கோ அல்லது பதில் தகவல் அனுப்ப இயலாதமையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறோம்.
எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம். எனவே இந்த இறப்பு தகவலை அறிந்த அனைவரும் எங்களுடைய துயரத்தையும், இழப்பையும் புரிந்துகொண்டு குடும்பத்தினர் துக்கத்தை அனுசரிக்கவும், இறுதி சடங்குகளை தனிப்பட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும்படி வேண்டிக்கொள்கிறோம்.
அனுப் குமார், அஜித் குமார், அனில் குமார்.
[email protected] என்ற இமெயில் முகவரிக்கு இரங்கல் மெசேஜ் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டது.
அஜித் அப்பா குறித்து கேப்டன் விஜயகாந்த் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்திகேட்டு மிகுந்த மனவேதனையடைந்தேன். தந்தையை இழந்து வாடும் சகோதரர் அஜித்குமாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்
#AjithKumar என தெரிவித்துள்ளார்.