நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவிற்கு நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
நடிகர் அஜித்தின் தந்தை மரணம்
தமிழ்த் திரைத்துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘AK’ என்று அழைக்கப்படும் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் இன்று அதிகாலை 3.15 மணியளவில் காலமானார்.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை உயிரிழந்தார்.
அஜித்குமார் தந்தையின் மரணத்திற்கு பல்வேறு திரைத்துறை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
நடிகர் விஜய் நேரில் அஞ்சலி
இந்நிலையில், நடிகர் விஜய் அஜித்தின் வீட்டிற்கே சென்று அவரது தந்தைக்கு நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். அவர், அஜித்தின் வீட்டிற்கு காரில் செல்லும் வீடியோ மற்றும், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிவருகின்றன.
திரையில் நடிகர்கள் இருவருக்கும் இடையில் பெரும் போட்டி இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் விஜயும் அஜித்தும் நண்பர்களாகவே அறியப்படுகின்றனர்.
#ThalapathyVijay visits the home of #AjithKumar to convey his condolences on the passing away of the latter’s father. pic.twitter.com/dYpCRyJ8nz
— Siddarth Srinivas (@sidhuwrites) March 24, 2023
விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இரங்கல்
இதனிடையே, நடிகர் விஜயின் தந்தையும், இயக்குநர்-நடிகர் எஸ்.ஏ.சந்திரசேகர் அஜித்தின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
எஸ்.ஏ.சந்திரசேகர் தனது இரங்கல் செய்தியில், “நடிகர் அஜித்குமாருடைய தந்தை மறைவு செய்தி கேட்டு வருத்தமடைகிறேன். எவ்வளவு வயசானாலும் அப்பா, அப்பா தான். அந்த இழப்பு ஒரு மகனுக்கு எந்த அளவுக்கு இழப்பாக இருக்கும் என்பது அனைத்து பிள்ளைகளுக்கும் தெரியும். அப்படி அந்த தந்தையை இழந்து தவித்து கொண்டிருக்கும் அஜித்துக்கு மன ஆறுதலை தரவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.
Thalapathy Vijay at Ajith Kumar’s residence to convey his condolences to the family members. pic.twitter.com/UbSQlVxxtw
— Vijay Fans Trends (@VijayFansTrends) March 24, 2023