85 வயதில் தாஜ்மஹாலை காண ஸ்டெச்சரில் வந்த மூதாட்டி! வைரலான புகைப்படம்


 குஜராத்தை சேர்ந்த நபர் ஒருவர் தாஜ்மஹாலை காண வேண்டுமென்ற தனது தாயின் ஆசையை நிறைவேற்றிய செயல் அனைவரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

தாயின் கடைசி ஆசை

குஜராத்தை சேர்ந்த 85 வயதான மூதாட்டி ஒருவருக்கு தாஜ்மஹாலை(taj mahal) காண வேண்டுமென்பது நீண்ட நாள் கனவாக இருந்திருக்கிறது. அவர் தனது ஆசையை மகன் இப்ராஹிடம்(ibrahim) தெரிவித்துள்ளார்.

85 வயதில் தாஜ்மஹாலை காண ஸ்டெச்சரில் வந்த மூதாட்டி! வைரலான புகைப்படம் | Old Woman Sees Taj Mahal On Stretcher Heartwarming@istock

கடந்த 32 வருடங்களாக முதுகு தண்டுவட பிரச்சனையால் படுத்தப் படுக்கையாக வாழ்ந்து வரும் தாயை இப்ராஹிம் கவனித்துக் கொண்டு வருகிறார்.

தனது தாயின் கடைசி ஆசையை எப்படியாவது நிறைவேற்ற வேண்டுமென தீர்மானித்த இப்ராஹிம் குஜராத்திலிருந்து ரயில் மூலமாக ஆக்ராவிற்கு அழைத்து வந்துள்ளார்.

புகைப்படம் வைரல்

இப்ராஹிம் முன்னதாகவே ஸ்டேச்சரில் உள்ளவர்களை தாஜ்மஹாலுக்குள் அனுமதிப்பார்களா என விசாரித்துள்ளார்.

பின்னர் சக்கர நாற்காலியில் இருப்பவர்கள் மட்டுமே செல்ல அனுமதி என கூறியுள்ளனர். பின்பு அவர் தாஜ்மஹால் பாதுகாவலர்களிடம் பேசி அனுமதி பெற்றுள்ளார்.

85 வயதில் தாஜ்மஹாலை காண ஸ்டெச்சரில் வந்த மூதாட்டி! வைரலான புகைப்படம் | Old Woman Sees Taj Mahal On Stretcher Heartwarming@twitter

கடைசியாக தனது தாயை தாஜ்மஹாலுக்குள் கூட்டி வந்து அதன் எழில் கொஞ்சம் அழகை காண வைத்துள்ளார்.

அவர்கள் குடும்பத்தோடு தாஜ்மஹாலுக்கு முன்பாக எடுத்த போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இணைய வாசிகள் இவரை நவீன சிரவணக்குமார் என புகழ்ந்துள்ளனர். சிரவண குமார்  ராமாயண காவியத்தில் வரும் கண் பார்வையற்ற பெற்றோரைக் காத்த  மகன்  கதாபாத்திரம் ஆகும்.   



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.