வேலூர் IFS நிதி நிறுவன மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் அதன் இயக்குநர்களில் ஒருவரான மோகன்பாபு வெளிநாட்டில் சுற்றித் திரியும் வீடியோ வெளியாகியுள்ள நிலையில், அந்த நிறுவனத்தின் காஞ்சிபுரம் கிளை இயக்குநர் ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிக வட்டி தருவதாகக் கூறி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களிடம் IFS நிதி நிறுவனம் பல்லாயிரம் கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்தது.
இந்த வழக்கில் அந்நிறுவன இயக்குநர்களான லட்சுமி நாராயணன், வேத நாராயணன், மோகன்பாபு, ஜனார்த்தனன் ஆகியோரை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்து, இண்டர்போல் உதவியுடன் தமிழக போலீசார் தேடி வருகின்றனர்.
Breathe…
இதனிடையே IFS நிதி நிறுவனத்தின் காஞ்சிபுரம் கிளை இயக்குநர் ஞானசேகரனை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.