பெரும்பாலான போதைப்பொருட்கள் பாகிஸ்தானில் இருந்து ஈரான் வழியாக இலங்கை மற்றும் ஆப்பிரிக்காவிற்கு கடத்தப்படுவதால், கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவது அவசியமானது என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிராந்திய மாநாட்டில் பேசிய அமித்ஷா, போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாட்டை தடுக்க, டிரோன்கள், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.