ராஞ்சி,
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில், ஒரு வீட்டின் சுவர் மீது சிறிய ரக விமானம் மோதி விபத்திற்குள்ளானது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்ட இந்த விபத்தில், விமானத்தில் பயணித்த பைலட் மற்றும் குழந்தை காயமடைந்தனர்.
விபத்தில் சிக்கியவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே விமானம் விபத்தில் சிக்கியது தொடர்பான காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
Related Tags :