சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்களின் ஹேஸ்டேக் வலியுறுத்தலுக்கு பிறகு, இந்த மாதம் (மார்ச்) தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் உறுதி அளித்த நிலையில், இன்று குரூப்-4 தேர்வு முடிவுகளை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. சுமார் 8 மாதங்களுக்கு பிறகு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு இருப்பது தேர்வர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள் தேர்வு IV (தொகுதி IV) ற்கான […]