பிட்டு பட நடிகைக்கு பணம்.. மாட்டிக்கொண்ட டொனால்ட் டிரம்ப்.. விரைவில் கைது.!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஆபாசபட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ், இவரது இயற்பெயர் ஸ்டெபானி கிளிஃபோர்ட். போர்ன் ஹப், நாட்டி அமெரிக்கா, ரெட் வேப் உள்ளிட்ட ஆபாச வலைதளங்களில் இவரின் வீடியோக்கள் பிரபலமானவை. இந்தநிலையில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஸ்டோர்மி டேனியல்ஸுடன் கடந்த 2006ம் ஆண்டில் நெருக்கமாக பழகியுள்ளார்.

இந்தசூழலில் கடந்த 2016 அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்கள் முன்பு, குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், கடந்த காலத்தில் தன்னுடன் நெருங்கிய உறவில் இருந்ததாக

ஆபாசபட பிரபலம் ஸ்டோர்மி டேனியல்ஸ் தெரிவித்தார். அதிபர் தேர்தல் நடைபெற இருந்த சூழலில் ஆபாசபட நாயகியின் பேச்சு வைரலானது, அது டிரம்பிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

போர்ன் பட நாயகியின் குற்றச்சாட்டை டிரம்ப் தொடர்ந்து மறுத்தார். அதைத் தொடர்ந்து ஸ்டோர்மி டேனியல்ஸை பேச விடாமல் இருக்க 1 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் டிரம்ப் சார்பில் வெகுமதியாக வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த பணமானது பிரச்சார நிதியில் இருந்து சட்ட விரோதமாக வழங்கப்பட்டதாக ஆட்சி மாறியதும் டிரம்ப் மீது வழக்குகள் தொடரப்பட்டது.

இந்தநிலையில் இந்த விவகாரம் குறித்து ஸ்டோர்மி டேனியல்ஸ் ட்விட் செய்தது தற்போது பேசு பொருளாகியுள்ளது. முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனக்கு பணம் கொடுத்தது குறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில், அவருடன் நெருக்கமாக இருந்த காலத்தில் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி பதிவுகள் டிரம்பிற்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஸ்டோர்மி டேனியல்ஸ் தெரிவித்துள்ளார்.

’‘நீங்கள் இன்னும் சிரிக்கிறீர்களா.. நீங்கள் டிரம்பைப் பற்றி வெறித்தனமாக ட்வீட் செய்வதை நிறுத்திவிட்டதாகத் தெரிகிறது, ஆனால் நீங்கள் கடைசியாகச் சிரிக்கிறீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று ஒரு ட்விட்டர் பயனர் 44 வயதான ஸ்டோர்மி டேனியல்ஸிடம் கேட்டார்.

அதற்கு அவர், “நான் நிச்சயமாக செய்வேன். நான் இன்று எனது வழக்கறிஞரிடம் தொலைபேசி பதிவுகளை ஒப்படைத்தேன், அது அவருக்கு (டிரம்ப்) காயத்தை ஏற்படுத்தும் என நினைக்கிறேன். என் குழந்தையுடன் வசந்த கால இடைவேளை நடவடிக்கைகளைத் திட்டமிடுகிறேன். இது ஒரு அற்புதமான நாள்,” என்று டேனியல்ஸ் பதிலளித்தார்.

குழந்தையின் உடல் உறுப்புகளை திருடிய மருத்துவமனை; தாயின் 48 ஆண்டு கால பாசப்போராட்டம்.!

முன்னதாக மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில் இருந்து கசிந்த ரகசிய ஆவணங்களை மேற்கோள் காட்டி, டிரம்ப் சமீபத்தில் தனது ட்ரூத் சமூக தளத்தில், “முன்னணி குடியரசுக் கட்சி வேட்பாளர் மற்றும் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் அடுத்த வாரம் செவ்வாய்கிழமை கைது செய்யப்படுவார்கள். போராட்டத்திற்கு தயாராகுங்கள்..” என்று எழுதி இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.