குறிப்பிட்ட சமூகத்தை திருடர்கள் என்று அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்க்கு நாடும் முழுவதும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அதே சமயத்தில் ராகுல்காந்தி சத்திய வன்மத்தோடு பேசியதால் தான், அதற்கான தண்டனை அவருக்கு கிடைத்துள்ளது என்று பாஜகவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சட்டம் அனைவருக்கும் சமம் என்று, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தாவது, “ராகுல்காந்தி விவகாரத்தை பொறுத்தவரை சட்டப்படிதான் அனைத்தும் நடந்துள்ளது.
முன்னதாக இதேபோல் கொலை முயற்சி வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட லட்சத்தீவு எம்பி தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். இப்படி பல உதாரணங்கள் உள்ளன.
அதேபோன்றுதான் ராகுல் காந்திக்கும் தண்டனை விதிக்கப்பட்டதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சாதாரண குடிமகனுக்கு என்ன சட்டமோ, அதே சட்டம் நாட்டின் உச்சபட்ச குடும்பமான காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்த ராகுல் காந்திக்கும்” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.