அதிமுகவை ஒன்றிணைத்து தலைமை ஏற்பேன் என்றும், பேரவையில் ஓபிஎஸ் பேசியதில் தவறு இல்லை என்றும் சசிகலா கூறியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் பதவி ஏற்க எடப்பாடி பழனிசாமி கடுமையாக போராடி வரும் நிலையில், அதற்கு ஓபிஎஸ், சசிகலா முட்டுக்கட்டையாக இருக்கின்றனர். இந்நிலையில், அதிமுகவுக்கு தலைமை ஏற்பேன் என்று சசிகலா அதிரடி காட்டியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு கோவிலுக்கு சென்று வி.கே.சசிகலா சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டசபையில் ஓபிஎஸ் இபிஎஸ் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறித்து கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார்.
பேரவையில் ஒரு தீர்மானம் கொண்டு வரும்போது ஒவ்வொருவரும் பேசுவதற்கு உரிமை உள்ளது. மக்கள் சார்ந்த பிரச்சனை என்பதால் அவர் பேசியது எந்த தவறும் இல்லை என கூறினார்.
அதிமுகவின் இரண்டு அணிகளையும் ஒருங்கிணைத்து நிச்சயமாக தலைமை ஏற்பேன் என்றும், அதிமுக எம்.ஜி.ஆர் போட்ட விதை அதனை வளர்த்து வந்தவர் ஜெயலலிதா, அவர்கள் வழியில் கட்சியை சிதறவிடாமல் ஒன்றிணைந்து நாடாளுமன்றத் தேர்தலில் பெருவாரியான வெற்றியை பெறுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
newstm.in