மூளையில் ரத்தக்கசிவு: லண்டன் மருத்துவமனையில் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ அட்மிட்| Brain haemorrhage: Singer Bombay Jayashree admitted to London hospital

லண்டன் : பிரபல பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீக்கு மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல கர்நாடக இசைப்பாடகி பாம்பே ஜெயஸ்ரீ(59). தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட ஏராளமான மொழிகளில் நூற்றுக்கணக்கான சினிமா பாடல்களையும் பாடி உள்ளார். தொடர்ந்து பல்வேறு மேடை கச்சேரிகளிலும் பாடி வருகிறார். சில தினங்களுக்கு முன் லண்டனில் நடக்கும் இசை நிகழ்ச்சிக்காக பாம்பே ஜெயஸ்ரீ சென்றிருந்தார்.

அங்கு ஓட்டலில் தங்கியிருந்த அவர் மயங்கிய நிலையில் கிடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் உடனடியாக லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக அவர் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. தற்போது அதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், மெல்ல குணமாகி வருவதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.