இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ராகுல் காந்தி எம்.பி.பதவியை இழப்பதுடன் மேலும் பல்வேறு சோதனைகளுக்கும் ஆளாகியுள்ளார்.
தண்டனை மீதான தடையுத்தரவு பெறாவிடின் எட்டு ஆண்டுகளுக்கு ராகுல் காந்தியால் மக்களவை அல்லது சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாது என்று சட்டநிபுணர்கள் கூறுகின்றனர்.
எம்பி பதவி இழந்ததால் அவருடைய வயநாடு தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.அங்கு இடைத்தேர்தல் நடைபெறலாம்.
ஆயினும் மேல் முறையீடு செய்வதற்கு ராகுல் காந்திக்கு 30 நாட்கள் அவகாசம் இருப்பதால் அதுவரை தேர்தல் ஆணையம் எந்த வித நடவடிக்கையையும் எடுக்காது என்று கூறப்படுகிறது.
மேலும் தற்போது அவர் குடியிருக்கும் அரசு இல்லத்தை காலி செய்யவும் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.