தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் படை கொண்டவராக திகழ்பவர் அஜித். இவருக்கு நேற்றைய தினம் மிகவும் துக்கமானதாக அமைந்து விட்டது. நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால் படுத்த படுக்கையாக இருந்த அவரது தந்தை சுப்ரமணியம், நேற்றைய தினம் காலமானார். இதனையடுத்து திரையுலகினர் பலரும் அஜித்துக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
நடிகர் அஜித்குமாரின் அப்பாவான பி. சுப்ரமணியம் கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். 85.வயதான அவர் நேற்று அதிகாலை தூக்கத்திலே மரணமடைந்தார். தந்தையின் மரணம் குறித்து அஜித்தும் அவரது சகோதரர்களும் வெளியிட்ட அறிக்கையில், எங்களது தந்தையார் திரு பி.எஸ். மணி பல நாட்களாக உடல்நலக்குறைவால் படுக்கையில் இருந்தார். இன்று அதிகாலை தன்னுடைய தூக்கத்தில் உயிர் நீத்தார்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தந்தையை அன்போடும், அரவணைப்போடும் கவனித்து வந்ததோடு, எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவர்களுக்கும் நாங்கள் கடைமைப்பட்டுள்ளோம். எங்கள் தந்தையார் சுமார் அறுபது ஆண்டுகளாக ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.
இந்த துயர நேரத்தில் பலர் எங்களிடம் விசாரிக்கவும், ஆறுதல் சொல்வதற்கும் தொலைப்பேசி வாயிலாகவோ, குறுந்தகவல் அனுப்பியோ விசாரித்து வருகின்றனர். தற்போதையை சூழ்நிலையில் உங்களின் அழைப்பை மேற்கொள்வதற்கோ, பதில் அனுப்ப இயலாமை குறித்தும் நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறோம்.
பொன்னியின் செல்வன் 2: போடு வெடிய.. சோழர்கள் தரிசனம்: வெளியான அதிரடி அறிவிப்பு.!
எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாக இருக்க விரும்புகிறோம். எனவே இதனை தனிப்பட்ட முறையில் செய்ய ஒத்துழைக்கும்படி வேண்டிக்கொள்கிறோம் என குறிப்பிட்டிருந்தனர். இதனையடுத்து அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் தொலைப்பேசி மற்றும் நேரில் அஜித்துக்கும் அவரது குடும்பத்துக்கும் ஆறுதல் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சுப்ரமணி சார் ஆத்மா சாந்தியடையட்டும். அஜித் சாருக்கு மனப்பூர்வமான இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் தனது அப்பாவை எப்போதும் நன்றாக பார்த்துக்கொண்டார். இது அவர் தனது பெற்றோர்கள் மீது கொண்டுள்ள அன்பை காட்டுகிறாது. இந்த இழப்பை தாங்கிக்கொள்ள கூடிய சக்தியையும், அமைதியையும் குடும்பத்தாருக்கு அளிக்குமாறு இறைவை பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக அஜித்தின் ‘ஏகே 62’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் கதை பிரச்சனை காரணமாக இந்த படத்திலிருந்து விக்கி விலகுவதாகவும், அவருக்கு பதிலாக மகிழ் திருமேனி ‘ஏகே 62’ படத்தை இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அஜித் தந்தையின் மறைவிற்கு விக்னேஷ் சிவன் இரங்கல் தெரிவித்துள்ளது அஜித் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மெண்ட்: பிரியா பவானி சங்கர் கூறிய அதிர வைக்கும் தகவல்.!