கோவையில் தனியார் நிதி நிறுவனம் மூலம் மோசடியில் ஈடுபட்ட 6 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் ஒயிட் காலர் அசோசியேட்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் 64 லட்சம் ரூபாய் மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து நிறுவனத்தை நடத்தி வந்த கோவை சுந்தராபுரம் சிவக்குமார் முருகேசன், லட்சுமி, தீபா, விமலா, பிரியா ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கும் 10 ஆண்டு சிறை தண்டனையும், 72 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ரவி தீர்ப்பளித்தார்