டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஐக்யூப் வெற்றியை தொடர்ந்து 5KW முதல் 25KW வரையிலான பிரிவில் சக்திவாய்ந்த பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்வதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளது.
சமீபத்தில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் காப்புரிமை கோரிய சில ஸ்கூட்டர் மாதிரி படங்கள் வெளியாகியுள்ளது. முதல் பார்வையிலே வீகோ ஸ்கூட்டரை நினைவுப்படுத்துகின்ற மின்சார ஸ்கூட்டரில் மிட் மவுன்ட் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும் என அறியப்படுகின்றது.
டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
தற்பொழுது விற்பனையில் கிடைக்கின்ற ஹப் மவுன்ட் டிவிஎஸ் ஐக்யூப் ஸ்கூட்டரை தொடர்ந்து புதிதாக வரவுள்ள மாடல் மிட் மவுன்ட் மாடலாக இருக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
புதிதாக வரவிருக்கும் EV களில் 5kW முதல் 25kW வரை பவர் வெளிப்படுத்த வாய்ப்புள்ளது. ஆனால் அதன் தற்போதைய அமைப்பு பொருந்தாது. எனவே, ஒரு ஸ்விங்கார்ம் ஒருங்கிணைந்த அமைப்புடன் கூடிய நடுவில் பொருத்தப்பட்ட மின்சார மோட்டார் கொடுக்கப்பட்டிருக்கும்.
கசிந்துள்ள மாதிரி வடிவமைப்பு, டிவிஎஸ் ஸ்கூட்டர் நடுப்பகுதியில் பொருத்தப்பட்ட மின்சார மோட்டரை பின்பற்றிய ஸ்கூட்டர் வீகோ மாடலை போல காட்சியளிக்கின்றது. ஆனால் பயன்பாட்டு மாதிரி வேறுபட்டதாக இருக்கலாம்.
தற்போதைய பிரீமியம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் TVS iQube ST ஆகும்.இந்த வேரியண்ட் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட நிலையில் இன்னும் விற்பனைக்கு வரவில்லை.
புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 2023 ஆம் ஆண்டு இறுதி அல்லது 2024 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் வெளியிடலாம்.