தியாகதுருகம் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மதுவில் விஷம் வைத்துக் கொன்ற மனைவி மற்றும் கள்ளக்காதலன் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து கள்ளக்குறிச்சி மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த வி.பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் சுப்பிரமணி என்பவருக்கு கடந்த அருகே கடந்த 16.04.2021ம் தேதியன்று தனது வீட்டில் வாந்தி மயக்கம் ஏற்பட்டதாகவும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு சேர்த்ததாகவும் சிகிச்சை பலனின்றி 17.04.2021-ந் தேதி இறந்துவிட்டதாகவும், முருகேசன் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் அவரது தங்கை இந்திரா தியாகதுருகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறந்து போன சுப்பரமணியின் மனைவி செல்வி (37) என்பவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் மகன் ஜெயமுருகன் (45) என்பவருக்கும் 2 வருடமாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக மேற்படி சுப்பிரமணிக்கும் அவரது மனைவி செல்விக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் செல்வியும், அவர் கள்ளத்தொடர்பு வைத்துள்ள ஜெயமுருகனும் சேர்ந்து சுப்பிரமணியை கொலை செய்ய சதித்திட்டம் போட்டுள்ளனர். அதன்படி 16.04.2021ம் தேதி செல்வியும், ஜெயமுருகனும் சேர்ந்து பூச்சிக்கொல்லி மருந்தை சுப்பிரமணி வைத்திருந்த மதுவுடன் கலந்து வைத்துள்ளனர்.
விஷம் கலக்கப்பட்ட மதுவென தெரியாமல் அருந்திய சுப்பரமணி இறந்துள்ளார் என்று தெரிந்தது. இதனை தொடர்ந்து, சந்தேக மரணத்தில் இருந்து கொலை வழக்காக சட்டப்பிரிவை மாற்றும் செய்து செல்வியையும், ஜெயமுருகனையும் கைது செய்து நீதிமன்றகாவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது தொடர்பான விசாரணை கள்ளக்குறிச்சி மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்தை நீதிபதி கீதா காவல்துறை அளித்த சாட்சியங்களின் அடிப்படையில் செல்வி மற்றும் ஜெயமுருகன் ஆகிய இருவரும் குற்றவாளி என்று உறுதி செய்து, இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் 31,500/- ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.