சென்னை: தமிழக பட்ஜெட் மற்றும் வேளாண்பட்ஜெட் குறித்த விவாதம் பேரவையில் நேற்று நடைபெற்றது. விவாதத்தைத் தொடங்கிவைத்து அதிமுக உறுப்பினர் கே.பி.முனுசாமி பேசினார்.
அதன் விவரம்: கே.பி.முனுசாமி (அதிமுக): பெங்களூரு அருகில் இருப்பதால்ஓசூரில்தான் நிறைய தொழிற்சாலைகள் தொடங்கப்படுகின்றன. மிகவும் பின்தங்கிய பகுதியானதருமபுரியில் தொழிற்சாலைகளை தொடங்க வேண்டும்.
உற்பத்தி செலவைக் கணக்கிட்டு நெல், கரும்புக்கு கட்டுப்படியாகும் விலை தர வேண்டும். நெல், கரும்புக்கு மட்டுமல்லாமல் அனைத்து விவசாய விளை பொருட்களுக்கும் ஆதார விலை வழங்க வேண்டும்.
வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்: கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை சர்க்கரை ஆலைகள் வழங்கியதால், கரும்பு பயிரிடும் பரப்பளவு 95 ஆயிரம் ஏக்கரில் இருந்து 1 லட்சத்து 55 ஆயிரம் ஏக்கராக அதிகரித்துள்ளது.
இல்லத்தரசிகளுக்கு உரிமைத் தொகை ரூ.1,000வழங்குவதுபோல, நெல், கரும்புக்கு வாக்குறுதி அளித்தபடி உரியவிலையை முதல்வர் வழங்குவார். இவ்வாறு விவாதம் நடந்தது.