திருப்பூர் கே.வி.ஆர். நகரில் கடந்த பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி அடுத்தடுத்து, 4 கடைகளில் ரூ.900 திருட்டு நடைபெற்றது. இந்தச் சம்பவம் குறித்து திருப்பூர் மத்திய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
அதில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது அதே பகுதியைச் சேர்ந்த ஆதவன் (28) என்பது தெரியவந்தது. இவரின் சொந்த ஊர் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஆகும். இந்த வழக்கு விசாரணை திருப்பூர் நீதித்துறை நடுவர் மன்றம் 2-இல் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்த நீதிபதி பழனிகுமார், கடைகளில் புகுந்து திருடியதற்காக ஆதவனுக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார். ஆதவனை 8 மணி நேரத்தில் கைது செய்து, 3 நாள்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.