இந்தியாவில் ஹோண்டா நிறுவனம் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக ஆக்டிவா விற்பனைக்கு மார்ச் 2024 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்ய உள்ளதை உறுதி செய்திருந்த நிலையில் தனது திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் 10 எலக்ட்ரிக் மாடல்கள் குறித்தான விபரத்தை மார்ச் 29 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ஹோண்டா ஆக்டிவா எலக்ட்ரிக்
ஆக்டிவா மட்டுமல்லாமல் பல்வேறு ஸ்கூட்டர்கள், பைக்குகள் உட்பட மாறுபட்ட பாடி அமைப்பில் பேட்டரி மூலம் இயங்கும் வகையிலான மாடல்களை உருவாக்க ஹோண்டா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வில் ஈடுபட்டு வருகின்றது.
EV வாகனங்களுக்கான திட்டங்களில் GJNA மற்றும் K4BA என இரண்டு திட்டங்களில் ஏற்கனவே வாகனங்களை தயாரிப்பிற்கு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று ஆக்டிவா எலக்ட்ரிக் ஆகும். இது நீக்க இயலாத வகையிலான பேட்டரி கொண்டிருக்கும். மற்றொன்று மாற்றக்கூடிய வகையிலான பேட்டரியை பெற்றிருக்கும்.
ஹோண்டா மோட்டார்சைக்கிளின் முதல் மின்சார ஸ்கூட்டராக ஆக்டிவா எலக்ட்ரிக் இருக்கலாம். இந்த மாடல் மார்ச் 2024 விற்பனைக்கு வரும் அதனை தொடர்ந்து செப்டம்பர் 2024 மற்றொரு மாடல் அறிமுகமாகும்.
முதல் ஆண்டில், இரண்டு மாடல்களும் ஒட்டுமொத்தமாக 1லட்சம் முதல் 1.5 லட்சம் விற்பனை எட்ட உற்பத்தி செய்ய ஹோண்டா திட்டமிட்டுள்ளது. பல்வேறு முழுமையான விபரங்கள் மார்ச் 29 ஆம் தேதி வெளியாகலாம்.