பாஜக ஒன்றிய தலைவரின் மகன் திருமணத்திற்கு காங்கேயம் வழியாக சென்ற ஹெச்.ராஜாவுக்கு, காங்கேயம் நகர தலைவர் சிவபிரகாஷ் தலைமையில் வரவேற்பு வழங்கப்பட்டது.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, “கடந்தாண்டு பட்ஜெட்டும் பொய்யானது. கடந்த முறை 2000க்கும் மேற்பட்டதா பஸ் வாங்கப்படுவதாக தெரிவித்திருந்தார். அது குறித்து இம்முறை பேசவே இல்லை. இந்த முறை மீண்டும் 1000 பஸ் வாங்குவதாகவும், 500 பஸ்களை புதிப்பிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். ஒரு பெயருக்கு பட்ஜெட்டை வாசித்துள்ளார். தமிழக அரசின் பட்ஜெட் மக்களுக்கு பயனில்லாத பட்ஜட், பட்ஜெட்டுக்கும் அவர்களுடைய செயல்பாட்டிற்கும் சம்மந்தமில்லை அண்ணாமலை டெல்லி சென்ற விசயம் குறித்து அவரே தெரிவிப்பார்.
பட்ஜெட் குறித்து அமைச்சர் சுக்குமி,லகதி,திப்புலி என அமைச்சர் வாசிக்கின்றார்.சென்றமுறை 243 கோடி ரூபாய் கூட்டுறவிற்கு ஒதுக்கப்பட்டது.இந்த முறை கூட்டுறவிற்கு ஒண்ணுமே ஒதுக்கவில்லை. ராகுல் தண்டனைக்கும் பா.ஜ.,வுக்கும் சம்பந்தம் கிடையாது. சட்டம் என்பது அனைவருக்கும் பொருந்தும். அதன் அடிப்படையிலேயே ராகுல்காந்தி கைது செய்யப்பட்டுள்ளார்” என தெரிவித்தார்.