தேசிய அரசியலில் ஸ்டாலின் போடும் பிளான்: தமிழ்நாட்டை நோக்கி திரும்பும் டெல்லி!

தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான

மீண்டும் தமிழ்நாட்டை நோக்கி தேசிய தலைவர்களை அழைக்க உள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு காலமே உள்ள நிலையில் பாஜக கூட்டணிக்கு எதிராக வலுவான கூட்டணி இன்னும் அமைக்கப்படவில்லை. காங்கிரஸை உள்ளடக்கி அனைத்து எதிர்கட்சிகளும் இணைந்து கூட்டணி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ஆனால் பாஜகவை காத்திரமாக எதிர்க்கும் சில கட்சிகள் காங்கிரஸ் உடன் இணைந்து பணியாற்றுவதில் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

அனைவரையும் இணைத்து ஒரு அணியாக நின்று எதிர்க்காமல் பாஜகவை வெற்றி பெற முடியாது என தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோர் மற்றும் பல்வேறு அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். மூன்றாவது அணி அமைந்தால் பாஜகவுக்கே சாதகமாக அமையும் என்பது அவர்களது கருத்தாக இருக்கிறது.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த கருத்தை வலியுறுத்தி பேசியுள்ளார். பாஜகவை எதிர்க்கும் அத்தனை கட்சிகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வர முதல்வர் ஸ்டாலின் சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

ஸ்டாலினின் 70ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மார்ச் 1ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற விழாவில் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும், பிஹார் மாநில துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் கலந்து கொண்டனர்.

தற்போது கலைஞரின் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்வையும் வரும் ஜூன் 3ஆம் தேதி தேசிய தலைவர்களை மீண்டும் தமிழ்நாடு நோக்கி அழைக்க உள்ளார். மதசார்பற்ற கூட்டணித் தலைவர்களை அழைத்து ஒரு நிகழ்ச்சியையும், பாஜக எதிர்ப்பு அரசியலில் உறுதியாக உள்ள மம்தா பானர்ஜி, சந்திரசேகர் ராவ், அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்களை அழைத்து ஒரு நிகழ்ச்சியையும் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

இதன் மூலம் இரு தரப்புக்கும் இடையே இணைப்பு பாலமாக செயல்பட முடியும்; தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலமே இருக்கும் நிலையில் பாஜகவோ எதிர்கட்சித் தலைவர்கள் மேல் வழக்கு தொடர்ந்து விசாரணை, கைது என வேகம் காட்டி வரும் நிலையில் அனைவரும் இணைந்து நிற்பதன் அவசியம் குறித்து ஸ்டாலின் பிற கட்சித் தலைவர்களிடம் பேச உள்ளதாக கூறுகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.