குஜராத் மாநிலத்தில் அகமதாபாத், ராஜ்கோட் ,சூரத் உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் மத்திய சிறைச்சாலைகளில் போலீசார் நேற்றிரவு தொடங்கி அதிகாலை வரை அதிரடியாக சோதனைகளை நடத்தினர்.
சுமார் 17 சிறைச்சாலைகளில் 1700க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். சிறைக்குள் சட்டவிரோதக் காரியங்களைத் தடுக்க இந்த சோதனை நடத்தப்படுவதாக காவல்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
சிறையில் கைதிகள் பயன்படுத்தி வந்த மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் சிறையில் கைதிகளுக்கு போதுமான வசதிகள் கிடைக்கின்றனவா என்றும் இந்த சோதனை மூலம் கண்டறியப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.