டெல்லி: அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் என்ன தொடர்பு என்பதே எனது கேள்வி, கேள்வி கேட்பதை ஒருபோதும் நிறுத்தமாட்டேன்.ஜனநாயகத்துக்கான மக்கள் குரலாக தொடர்ந்து எனது குரல் ஒலிக்கும்.அதானி குழுமத்தில் ரூ.20,000 கோடி முதலீடு செய்த நிறுவனங்கள் யாருடையது, அந்த பணம் யாருடையது என்று ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார். மோடி வெளிநாடு சென்றபோதெல்லாம் அதானி குழுமத்துக்கு தொழில் ஒப்பந்தங்கள் கிடைத்ததை புகைப்பட ஆதாரத்துடன் சுட்டிக்காட்டினேன். எனது பேச்சுகள் அனைத்தும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.