Rahul Gandhi: 'மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் இல்லை' – கெத்தாக சொன்ன ராகுல் காந்தி

Rahul Gandhi On Disqualification: 2019ஆம் ஆண்டு தொடரப்பட்ட மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில், குஜராத் சூரத் நீதிமன்றத்தால் தண்டனை பெற்றதற்காக, மக்களவையில் இருந்து ராகுல் காந்தி நேற்று (மார்ச் 24) தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 

இந்நிலையில், ராகுல் காந்தி இன்று (மார்ச் 25) டெல்லியில் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி முன்வைத்தார். ராணுவம், விமானத்துறை தொடர்பனா குற்றச்சாட்டுக்களை ஆதாரத்துடனே வைத்து வருகிறேன். ஜனநாயகம் குறித்து பேசும் பாஜக, என்னை மக்களவையில் பேச அனுமதிப்பது இல்லை. என் மீதான குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை. தேசத்திற்கு எதிரான சக்திகளை முறியடிப்பேன். எந்த அச்சுறுத்தலுக்கும் பயப்பட மாட்டேன். மோடி – அதானி உறவு குறித்து நான் கேள்வி கேட்பதை நிறுத்தப்போவது இல்லை. 

தேசத்திற்கு எதிரான சக்திகளை போராடி முறியடிப்பேன். பாஜக அமைச்சர்கள் என் மீது பொய்யான குற்றச்சாட்ட்டுக்களை முன் வைக்கின்றனர். நாடாளுமன்றத்தில் நான் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிட்டனர். என் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக மக்களிடம் நியாயம் கேட்பேன். பல போலி நிறுவனங்கள் மூலம் அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 

என் மீது வன்முறையை கட்டவிழ்த்தாலும், சிறையில் அடைத்தாலும் அஞ்ச மாட்டேன். என் பெயர் சாவர்க்கர் இல்லை, ஒருபோதும் நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. பாராளுமன்றத்தில் என்னைப்பற்றி தவறான குற்றச்சாட்டுக்களை மத்திய அமைச்சர்கள் கூறியுள்ளனர். பாராளுமன்றத்தில் அதானி விவகாரம் குறித்து பிரதமரை நோக்கி கேள்வி எழுப்பியதில் இருந்து பிரச்சனை தொடங்கியது. 

பிரதமர் மோடியே நோக்கி 3 கேள்விகளை முன்வைத்தேன், அவை:

1. அதானி குழுமத்தில் ரூ.20,000 கோடி முதலீடு செய்த நிறுவனங்கள் யாருடையது, அந்த பணம் யாருடையது? 

2. மோடி வெளிநாடு சென்றபோதொல்லாம் அதானி குழுமத்துக்கு தொழில் ஒப்பந்தங்கள் கிடைத்ததை புகைப்பட ஆதாரத்துடன் வெளியிட்டேன்.

3. அதானிக்காக விமான நிலையங்களின் விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டன. அதானி குழும முறைகேடு விவகாரத்தில் சீனாவை சேர்ந்த ஒருவருக்கு தொடர்பு உள்ளது.

அரசியல் நீதி என்பது எனது ரத்தத்தில் கலந்துள்ளது. எனது பேச்சு மோடிக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகளுக்கு நன்றி. அவர்களுடன் இணைந்து பணியாற்றுவேன். நாட்டு மக்களின் ஜனநாயகத்திற்காக நான் போராடிக் கொண்டிருக்கிறேன். நான் பாராளுமன்றத்துக்கு உள்ளே இருந்தாலும், வெளியே இருந்தாலும் என் பணியைச் செய்வேன்” என்றார். 

கடந்த மார்ச் 23ஆம் தேதி, குஜராத்தின் சூரத் நீதிமன்றத்தால் ராகுல் காந்தி மீதான கிரிமினல் அவதூறு வழக்கில், அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இதன் விளைவாக, அவர் குற்றம் நிரூபிக்கப்பட்ட நாளில் இருந்து மக்களவை உறுப்பினராகவும் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 

2019ஆம் ஆண்டு, ஒரு பேரணியின் போது ராகுல் காந்தி ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், மோடி என்ற குடும்பப்பெயருடன் இருக்கும் பலர் ஏன் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினார். இதனால் அவர் மீது பாஜக எம்எல்ஏ பூர்ணேஷ் மோடி அவதூறு வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.