எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
இந்தியாவில் முன்னணி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருப்பது சாம்சங். இந்த ஸ்மார்ட்போனில் Galaxy S23, Galaxy S23+, Galaxy S23 Ultra ஆகிய மூன்று வேரியண்ட்களில் வெளியாகியுள்ளது. இதில் புதிய One UI 5.1 OS இடம்பெற்றுள்ளது.
இந்த OS Android 13 சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தனிப்பட்ட Custom வசதிகள் பல இடம்பெற்றாலும் முழுமையான வசதிகள் குறித்து பலருக்கு இன்னும் தெரியாது. அப்படி நமக்கு இந்த உங்களில் இருக்கும் தெரியாத சில வசதிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Samsung Gallery App Trick
நமது போட்டோக்கள் அனைத்தும் இடம்பெற்றுள்ள Gallery ஆப் உள்ளே சில ஸ்மார்ட் வசதிகள் கொண்டுள்ளது. இப்போது பயனர்கள் ஒரு பொருளையோ அல்லது நபரையோ ஒரே நேரத்தில் தேடமுடியும். இது நமது முகங்களை அறிந்து நமக்கென தனித்தனியாக ஆல்பம் வைத்திருக்கும்.
Video Call Effects
உங்களின் வீடியோ காலிங் அனுபவத்தை இன்னும் சிறப்பானதாக மாற்ற பல வசதிகள் இப்போது சேர்க்கப்பட்டுள்ளன. Background Blur, தனிப்பட்ட போட்டோ வசதிகள், ஆட்டோ பிரேம் போன்ற பல வசதிகள் இடம்பெற்றுள்ளன.
இதை வைத்து நாம் Whatsapp, Google Meet, Skype என முக்கியமான அனைத்து வீடியோ காலிங் செயலிகளிலும் வேலை செய்யும். இதற்காக நாம் Advanced Settings சென்று Video Call Effects On செய்யலாம்.
Battery Widgets
நாம் பயன்படுத்தும் சாம்சங் கருவிகள் அனைத்திற்கும் தேவையான Battery Widget இப்போது இடம்பெற்றுள்ளது. இதனால் இனி நமது Galaxy Buds மற்றும் Galaxy Watch போன்றவற்றின் பேட்டரி அளவை இதன் மூலமாக நேரடியாக பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
பேட்டரி பாதுகாப்பு
நமது ஸ்மார்ட்போனின் பேட்டரி பாதுகாப்பதற்கு இப்போது Battery Health Care என்ற ஆப் உள்ளது. இதை நாம் செயல்படுத்த Settings சென்று Battery ஆப்ஷனில் Device Care சென்று மாற்றவேண்டும். இதனால் இனி உங்களின் ஸ்மார்ட்போன் 85% மேல் சார்ஜ் ஆகாது.
Bixby Text Call
Google மற்றும் Apple siri போல Bixby சாம்சங் நிறுவனத்தின் வாய்ஸ் அசிஸ்டன்ட் ஆகும். இதை வைத்து நாம் Bixby Text Call feature, Voice Assistant உதவியுடன் பேசமுடியும். மேலும் நம்மை யாராவது தொடர்பு கொள்ள முயற்சி செய்தால் அதற்கு முன்னதாக யார் நம்மை அழைப்பது என்று கூட Bixby வாய்ஸ் மூலமாக நமக்கு தெரிவிக்கும்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்