சிக்கபல்லாபூர்: இந்தியா வளர்ந்த நாடாக மாறுவதற்கான பாதையில் இருக்கிறது என்றும் அனைவரது முயற்சியின் காரணமாக வளர்ந்த நாடாக மாறும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவின் சிக்கபல்லாபூரில் நடைபெற்ற ஸ்ரீ மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, நிறுவனத்தை தொடங்கிவைத்தார். இதையடுத்து பேசிய அவர், ”நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்து தற்போது அமிர்த மகோத்சவ காலத்தில் உள்ளது. வளர்ச்சி பெற்ற நாடாக உருவெடுக்க வேண்டும் என்பதில் நாடு உறுதியாக உள்ளது.