Baby Rakshana Viral Photo: 2011ஆம் ஆண்டில், கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்து, ஹிட் அடித்த திரைப்படம், சிறுத்தை. ரத்னவேல் பாண்டியன், ராக்கெட் ராஜா என காமெடி, ஆக்சன், எமோஷன் என அத்தனை கமெர்ஷியல் அம்சங்களையும் கொண்ட படமாக அது இருந்தது. அந்த படம்தான் இயக்குநர் சிவாவுக்கு, அடையாளமாகவும் மாறிப்போனது. தற்போது வரை அவர் சிறுத்தை சிவா என்றே அழைக்கப்படுகிறார்.
சிறுத்தை படம், 2006ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான விக்ரமகுடு என்ற படத்தின் ரீமேக்தான். பாகுபலி பட புகழ் ராஜமௌலி இயக்கிய படம்தான் அந்த விக்ரமகுடு. ரவிதேஜா, அனுஷ்கா ஆகியோர் நடித்த அந்த படத்திற்கு, தற்போது ஆர்ஆர்ஆர் படத்திற்காக ஆஸ்கார் வாங்கிய எம்.எம். கீரவாணிதான் இசையமைத்திருந்தார். அந்த படம் தெலுங்கில் ஹிட் அடித்ததை அடுத்து, தமிழில் ரீமேக்கானது. தமிழிலும் மெகா-ஹிட் அடிக்க, இந்தியில் பிரபு தேவா, அக்சய் குமாரை வைத்து ‘ரௌடி ரத்தோர்’ என்ற பெயரில் எடுத்தார். அந்த படமும் பாலிவுட்டில் ரூ.100 கோடியை வசூல் செய்தது.
கார்த்தியின் மகள்!
அந்த வகையில், சிறுத்தை படம் இன்றும் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டால், அதனை சிறுவர் முதல் பெரியவர் வரை பார்க்காதவர்கள் யாருமே இல்லை. அந்த படத்தின் அத்தனை பாடல்களும் ஹிட்டான நிலையில், ‘ஆராரோ ஆராரிராரோ’ என்ற தாலாட்டு பாடலும் பட்டித்தொட்டி எங்கும் ஹிட் எனலாம். அந்த பாடல் ஒலிக்கும்போதெல்லாம், அந்த படத்தில் கார்த்தியின் மகளாக நடித்திருந்த சிறுமிதான் அனைவரின் நியாபகத்திற்கும் வருவார். இப்போது அந்த சிறுமி வளர்ந்து பதின்ம வயது பெண்ணாக மாறிவிட்டார் என சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள்.
இந்நிலையில், கார்த்தியின் மகளாக நடித்திருந்த பேபி ரக்ஷானாவின் தற்போதைய புகைப்படம் ஒன்று வெளியாகி, வைரலாகி வருகிறது. மேலும், அவர் அளித்த பேட்டி ஒன்றில், கிளாசிக்கல் நடனம் கற்றுக்கொள்வதற்காக நடிப்பில் இருந்து ஓய்வு எடுத்ததாக அவர் கூறியிருந்தார். ரக்ஷனா, தற்போது 12ஆம் வகுப்பு படித்து வருவதாகவும், படிப்பில் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் கூறிய அவர்,”படித்து முடித்த பிறகு நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் மீண்டும் நடிப்பேன்” என்றார். மேலும், அவர் கார்த்தி குறித்து பேசியபோது, அவர் தனது பிறந்தநாள் அன்று ஒரு பரிசைக் கொண்டு வந்து, தன்னிடம் கொடுத்த தருணத்தை தன்னால் மறக்க முடியாது என்றும் கூறினார். சிறுத்தை படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து மணிரத்னத்தின் ‘கடல்’, ‘ஓ காதல் கண்மணி’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.