எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
நடிகை ஜோதிகா 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியில் நடித்து வருகிறார்.
ஜோதிகாநடிகை ஜோதிகா தமிழ் சினிமாவில் வாலி படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார் நடிகை ஜோதிகா. நடிகர் சூர்யாவுடன் பூவெல்லாம் கேட்டுப்பார், காக்க காக்க, பேரழகன், சில்லுனு ஒரு காதல், உயிரிலே கலந்தது,மாயாவி உட்பட 7 படங்களில் இணைந்து நடித்தார்.
Ajith: தந்தை இறந்த சோகத்திலும் அஜித் செய்த காரியம்… நெகிழ்ந்த பார்த்திபன்!
36 வயதினிலே அப்போது சூர்யாவுக்கும் ஜோதிகாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து கடந்த 2006ஆம் ஆண்டு இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்ளுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த நடிகை ஜோதிகா 2015 ஆம் ஆண்டு வெளியான 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுத்தார்.
Nayanthara:மீண்டும் பிகினியில் தரிசனம் கொடுக்கும் நயன்தாரா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
காதல் தி கோர்அதன் பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் ஜோதிகா. கடைசியாக ஜோதிகா நடிப்பில் உடன்பிறப்பே படம் வெளியானது. இந்தப் படத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தற்போது நடிகை ஜோதிகா மலையாள நடிகர் மம்மூட்டியுடன் காதல் தி கோர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
Aishwarya Rajinikanth: ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பினாமி நான்… அதிர வைத்த ஈஸ்வரி!
மும்பையில் வீடுசமீபத்தில்தான் நடிகை ஜோதிகாவும் நடிகர் சூர்யாவும் மும்பையில் குடியேறினர். பிள்ளைகளின் படிப்புக்காக மும்பையில் குடியேறியதாக கூறப்பட்டது, மேலு மும்பையில் வீடு ஒன்றை வாங்கிய நடிகர் சூர்யா 66 கோடி ரூபாய் மதிப்பில் பிளாட் ஒன்றையும் வாங்கியிருப்பதாக தகவல் பரவி வருகிறது. பிள்ளைகளின் படிப்புக்காக நடிகர் சூர்யா பெற்றோரை விட்டுவிட்டு மும்பையில் குடியேறியுள்ளார்.
Ajith: ‘வாலி படத்தின் கதை சொன்னபோது’… அஜித் அப்பா குறித்து எஸ் ஜே சூர்யா உருக்கம்!
மீண்டும் இந்தியில்மேலும் மும்பையில் சில தொழில்களையும் தொடங்கியுள்ளார் சூர்யா. இந்நிலையில் நடிகை ஜோதிகா பாலிவுட் படம் ஒன்றில் நடித்து வரும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியில் உருவாகும் ஸ்ரீ என்ற படத்தில் நடிகை ஜோதிகா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். நடிகை ஜோதிகா டோலி சஜ்ஜா கே ரக்னா என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.
என் அம்மா 47 வயசுல பிள்ளை பெத்ததுக்கு நான் எதுக்கு வெட்கப்படணும்? பிரபல நடிகை கேள்வி!
25 ஆண்டுகளுக்கு பிறகுஇந்நிலையில் 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியில் அடியெடுத்து வைத்துள்ளார் நடிகை ஜோதிகா. ஏற்கனவே நடிகர் சூர்யா இந்தியில் ரீமேக்காகும் சூரரைப்போற்று படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது ஜோதிகாவும் இந்தியில் என்ட்ரி கொடுத்துள்ளதை பார்த்த ரசிகர்கள் சூர்யாவும் ஜோதிகாவும் இந்தியிலம் ஒரு ரவுண்ட் வருவார்களா என எதிர்பார்த்துள்ளனர்.
Ajith: நன்றியே இல்லாத ஆள் அஜித்… பிரபல நடிகர் ஆவேசம்!
Jyothika