கர்நாடக: கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சிக்கு நிலையான பாஜக அரசு தேவை என்று தாவணகெரேவில் பிரதமர் மோடி கூறியுள்ளார். சந்தர்ப்பவாத, சுயநல அரசுகள் நீண்ட காலமாக இருந்தது கர்நாடக மாநிலத்தை பாதித்துள்ளது என்று நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் இரட்டை இயந்திர ஆட்சியை மீண்டும் கொண்டு வர கர்நாடகா நடவடிக்கை எடுத்துள்ளது.காங்கிரஸ் கட்சியினர் ‘மோடி தேரி கபர் குதேகி’ என்கிறார்கள் ஆனால் கர்நாடக மக்களுக்கு ‘மோடி தேரா கமல் கிலேகா’ கனவு இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.