பகாசூரனில் சூர்யாவை அசிங்கப்படுத்தினாரா மோகன் ஜி! வெளியான ஆதாரம்?

பழைய வண்ணாரப்பேட்டை, திரெளபதி,  ருத்ரதாண்டவம்  ஆகிய படங்களை இயக்கிய மோகன் ஜி சமீபத்தில் பகாசூரன் படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படம் கடந்த மாதம்  திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.  இயக்குனர் செல்வராகவன் நாயகனாக நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இதையடுத்து இப்படம் நேற்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த சூழலில் பகாசூரனில் சூர்யாவை மோகன் ஜி அசிங்கப்படுத்தும் வகையில் காலண்டர் வைத்ததாக தற்போது ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. 

காலண்டர் சர்ச்சை

சூர்யா நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு ஓடிடி தளத்தில் ஜெய்பீம் படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் பெயர் பெற்றது. ஜெய்பீம் படத்தில் போலீஸ் அதிகாரி வீட்டில் அக்னி சட்டி இருப்பது போல ஒரு காட்சி இடம்பெறும். உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் குற்றவாளியான போலீஸ் ஒருவரின் வீட்டில் அக்னி சட்டி இருப்பது போல காட்சி இடம்பெற்றது பாமகவினரை கோபப்படுத்தியது.

வேண்டுமென்ற ஒருகுறிப்பிட்ட சாதியை வில்லனாக காட்ட முயற்சிப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனால் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இந்தப்படத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அதோடு நடிகர் சூர்யாவுக்கு எதிராகவும், இயக்குநர் ஞானவேலுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடைபெற்றது. அதன்பிறகு இயக்குநர் அந்த அக்னி சட்டி காலண்டரை வைத்ததற்கு வருத்தம் தெரிவித்து பிரச்சனையை முடித்து வைத்தார். 

பதிலடியா?

இந்தநிலையில் பகாசூரன் படம் நேற்று ஓடிடியில் வெளியானதை அடுத்து அதனைக் கண்ட ரசிகர்கள் சிலர், படத்தில் காலண்டர் மூலம் மோகன் ஜி சூர்யாவை அசிங்கப்படுத்தியதாக சமூக வலைதளங்களில் எழுதி வருகின்றனர். அதன்படி விலைமாது ஒருவரின் வீட்டில் உள்ள காலெண்டரில் சிவக்குமார் அண்ட் கோ என எழுதப்பட்டுள்ளது. இதனைக்கண்ட ரசிகர்கள் மோகன் ஜி பாமக ஆதரவாளர் என்பதால் வேண்டுமென்றே படத்தில் இப்படி ஒரு காட்சியை வைத்ததாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த ஒரு காலெண்டர் புகைப்படம் இப்போது சமூக வலைதளத்தில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. மோகன் ஜியை சூர்யா ரசிகர்கள் ட்விட்டரில் விளாசி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.