ஸ்பெயினில் சுமார் 4 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலான வனப்பகுதியை தின்று விழுங்கிய காட்டுத்தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளில் சராசரிக்கும் குறைவான மழைப்பொழிவை பெற்றதால், ஸ்பெயின் ஒரு நீண்ட கால வறட்சியில் சிக்கியுள்ளது. இதனால் காட்டுத்தீ ஏற்படும் நிகழ்வு அடிக்கடி அரங்கேறி வருகிறது.
கடந்த ஆண்டில் மட்டும் அப்படி 493 இடங்களில் ஏற்பட்ட தீ விபத்துகளில் சிக்கி, 3 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான நிலம் அழிவுக்குள்ளானதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
இந்த நிலையில், கிழக்கு வெலன்சியாவில் பற்றிய காட்டுத்தீயை அணைக்க 500க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறையினர், 20க்கும் மேற்பட்ட விமானங்கள், ஹெலிகாப்டர்கள் களமிறக்கப்பட்டன.
அதன் பலனாக தீ மற்ற பகுதிகளுக்குப் பரவாமல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.