அரசு பங்களாவை காலி செய்ய ராகுலுக்கு ஒரு மாதம் கெடு: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: பிரதமர் மோடியின் குடும்ப பெயர் குறித்து அவதூறு விளைவிக்கும் விதமாக பேசியதாக கூறி காங்கிரஸ் எம்பி ராகுல்காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டது. விதிகளின் படி, 2 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் தண்டனை பெற்றால் மக்கள் பணிகளில் ஈடுபட முடியாது என்பதால், ராகுல்காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். அதனால் தற்போது அவர் வசித்து வரும் அரசு பங்களாவில் ெதாடந்து வசிக்க முடியாது. அதன்படி, தற்போது டெல்லியில் துக்ளக் லேன் பகுதியில் வசித்து வரும் அரசு பங்களாவில் இருந்து ராகுல் காந்தி வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தகுதிநீக்க உத்தரவு பெறப்பட்ட ஒரு மாத காலத்திற்குள் ராகுல் காந்தி  வீட்டை காலி செய்ய வேண்டும் என ஒன்றிய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வசதி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2004ம் ஆண்டு முதல் ராகுல் காந்தி மேற்கண்ட அரசு பங்களாவில் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.