புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியதாவது: எனது அண்ணன் ராகுல் காந்தியின் குரலை ஒடுக்க மத்திய அரசு சதி செய்கிறது. அவர் எதற்கும் அஞ்சமாட்டார்.
எப்போதும்போல உண்மையை பேசுவார். நாட்டு மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பார். எங்கள் தந்தை ராஜீவ் காந்தி நாட்டுக்காக உயிரை தியாகம் செய்தார்.அவரது மகனை துரோகி என்று குற்றம் சாட்டுகின்றனர்.
நாங்கள் காஷ்மீர் பண்டிட் குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஒட்டு மொத்த பண்டிட் குடும்பத்தை அவமதிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் பேசினார். ஆனால் அவருக்கு எந்த நீதிமன்றமும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவில்லை. இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.