சீரியல் நடிகை கைது… நண்பனுடன் கணவரை கொல்ல முயற்சி – அதிர்ச்சி சம்பவம்!

Tamil Serial Actress Arrest: பொள்ளாச்சி அருகே உள்ள டி நல்ல கவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் அப்பகுதியில் உள்ள குளிர்பான கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு ரமேஷ் கோவை பீளமேட்டை சேர்ந்த ரம்யா என்பவரை திருமணம் செய்துகொண்டார். 

இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. கடந்த சில மாதங்கள் முன்பு கருத்து வேறுபாடு காரணமாக ரம்யா பீளமேடு பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். சினிமாவில் நடிக்கும் ஆர்வம் உள்ளதால் கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த டேனியல் என்கிற சந்திரசேகருடன், பழக்கம் ஏற்பட்டது.

தற்போது ரம்யா ‘சுந்தரி, ‘கண்ணெதிரே தோன்றினாள்’ ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். ரமேஷ் தனது இரண்டு குழந்தைகளை பராமரிக்க முடியாமல் பீளமேடு சென்று ரம்யாவிடம் குழந்தைகளையும் தனது தாயையும் பார்த்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். 

இதையடுத்து ரம்யா சில தினங்கள் முன்பு, ரமேஷ் வீட்டுக்கு குடிபெயர்ந்தார். இந்நிலையில், ரம்யா தனது நண்பர் டேனியல் என்கிற சந்திரசேகரனிடம் தன் கணவர் குடித்துவிட்டு கொடுமைப்படுத்துவதாகவும் அவரை கொலை செய்ய வேண்டுமெனவும் கூறியுள்ளார். 

இதனால், நேற்று முன்தினம், இரவு ரம்யாவும் ரமேஷும் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது இருசக்கர வாகனத்தை கொண்டு சந்திரசேகர் அவர்கள் மீது மோதியுள்ளார். பின்னர், ரமேஷை தாக்கி அவரின் கையை உடைத்து, சந்திரசேகர் மறைத்து வைத்திருந்த ஆக்ஸாபிலைட் மூலம் ரமேஷின் கை, கழுத்து, தலை பகுதிகளை தாக்கி விட்டு தப்பித்து விட்டார். 

ரமேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பெயரில் போலீசார் மொபைல் போனில் வந்த அழைப்புகள் வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில், சீரியல் நடிகை தனது கணவரை கொல்ல நண்பர் மூலம் திட்டம் தீட்டியது தெரியவந்தது. ரம்யா மற்றும் சந்திரசேகரை கைது செய்த கோவை மதுக்கரை போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.