தமிழகத்தில் பாஜக – அதிமுக தேர்தல் கூட்டணி? எச் ராஜா சொன்ன தகவல்!

மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த பாஜக மூத்த தலைவரும் தேசிய செயற்குழு உறுப்பினருமான எச் ராஜா மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  அவர் பேசுகையில்,  சட்டமன்றத்தில் புளூகுமூட்டை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.  பட்ஜெட்டில் தகுதியுள்ள தாய்மார்களை கண்டுபிடிப்பதாக கூறியுள்ளனர்.  திமுக என்பது மக்களை ஏமாற்றி ஜேப்படி செய்யும் கட்சி.  தமிழக அரசுக்கு 90ஆயிரம் கோடி போன வருடமே கடன். 6 லட்சம் கோடி 60 ஆயிரம் ரூபாய் கோடி கடனில் தமிழ்நாடு உள்ளது.  மத்திய அரசு உதவியோடு தான் திட்டங்களை செய்கின்றனர்.  மத்திய அரசு திட்டங்களை தங்கள் திட்டங்களாக சொல்லி செயல்படுத்துகின்றனர். அதை பட்ஜெட்டிலும் வாசிக்கின்றனர்.  மக்களை ஏமாற்ற மற்றொரு சந்தர்ப்பமாக பட்ஜெட்டை திமுக அரசு எடுத்துக்கொண்டுள்ளனர்.

முதல்வர் ஸ்டாலினுக்கு நிர்வாகம் செய்ய முடியவில். தனது மந்திரிசபையையும், குடும்பத்தையும் கூட  அவர் கன்ட்ரோலில் இல்லை.  என்னுடைய நண்பர் முதல்வர். ஆனால் முதல்வரின் நிலை கண்டு பரிதாபப்படுகிறேன்.  மூத்த அமைச்சர்கள் ஏதாவது ஒன்றை பேசி சர்ச்சையை கிளப்புகின்றனர். அவர் கூட நாள்தோறும் அமைச்சர்கள் ஏதாவது பேசி பிரச்சனையை ஏற்படுத்தக்கூடாது என சிந்தித்து கொண்டே விழிப்பதாக கூறுகிறார்.  திருச்சி சிவா வீட்டில் கத்தி கம்போடு நுழைந்து அடித்து நொறுக்கி காவல்நிலையத்தையும் தாக்குகின்றனர்.  திமுகவில் தடி எடுத்தவன் தண்டல்காரனாக உள்ளது. தமிழகத்தில் இனிமேல் NO DMK எனும் நிலைபாட்டை எடுக்க வேண்டும்.  அதானி குழுமத்தால் யாருக்கு என்ன நஷ்டம் வந்துள்ளது. அதானியால் ஒரு பொதுத்துறை வங்கியாவது பாதிக்கப்பட்டதா? அவ்வாறு நஷ்டம் ஏற்பட்டால் நான் மன்னிப்பு கேட்கிறேன்.  

ராகுல்காந்தி எப்போதும் நல்ல மனநிலையுடன் பேச மாட்டார்.  உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ராகுல்காந்திக்கு எதிராக தீர்ப்பு வந்தால் அவர் தகுதியிழப்பு செய்யப்பட்டு உள்ளார்.  ராகுல்காந்தி மென்டல் பேலன்சோடு பேசுகிறார். ராகுல்காந்தி மீது பிரதமரோ மத்திய அரசோ பாஜகவோ வழக்கு தொடரவில்லை.  மன்மோகன்சிங் கொண்டு வந்த சட்டத்தை கிழித்து தன்வினை தன்னைச்சுடும். ராகுல்காந்தியை பைத்தியம் போல உளரலாமா என கே.எஸ்.அழகிரி கேட்க வேண்டும்.  உச்சநீதிமன்றத்தில் ராகுல்காந்தி தீர்ப்பு உறுதி செய்யப்பட்டால் வீரமணி திருமாவளவன் ஒருசமூகத்திற்கு எதிராக பேசி வருவதால் அவர்களும் தகுதி நீக்கம் செய்யப்படலாம். அது தீர்ப்பு வந்த பிறகு தான் தெரியும். அண்ணாமலை அதிமுக- பாஜக கூட்டணி குறித்து பேசுவது குறித்த கேள்விக்கு,  பாஜக கூட்டணி குறித்து முடிவு செய்ய டெல்லியில் 16 தலைவர்கள் கொண்ட குழு உள்ளனர். கூட்டணி குறித்த கேள்விகளுக்கு தற்போது பதில் எதுவும் சொல்ல விரும்பவில்லை என பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.