தென் லண்டன் பேருந்து ஒன்றில் நள்ளிரவில் நான்கு பெண்கள் பயணிகள் இருவரை மது போத்தலால் சரமாரியாக தாக்கிவிட்டு மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் உதவி
குறித்த நான்கு இளம்பெண்கள் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள பொலிசார், தற்போது பொதுமக்கள் உதவியை நாடியுள்ளனர்.
கொடூர தாக்குதலுக்கு இலக்கான ஆண் மற்றும் பெண் பயணிகள் இருவரும் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Image: Metropolitan Police
தற்போது, மார்ச் 25ம் திகதி அந்த நான்கு இளம்பெண்களின் புகைப்படங்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
பெண் பயணி ஒருவரை போத்தலால் சரமாரிய தாக்கிய அந்த பெண்கள், பாதிக்கப்பட்ட பெண்ணின் அருகாமையில் அமர்ந்திருந்த ஆண் ஒருவரை ஊன்றுகோலால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால், தலையில் காயம்பட்ட அந்த நபர் மருத்துவ சிகிச்சையை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர்புடைய சம்பவமானது 2022 ஆகஸ்டு 28ம் திகதி, தடம் எண் 250 ஸ்ட்ரீதம் பகுதியில் இருந்து க்ராய்டன் வரை செல்லக்கூடிய பேருந்தில் நடந்துள்ளது.
தாக்குதலை அடுத்து, அந்த நான்கு பெண்களும் பேருந்தில் இருந்து உடனடியாக வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.
தற்போது புகைப்படங்களை வெளியிட்டுள்ள பொலிசார், பொதுமக்களில் எவரேனும் இந்த பெண்களை அடையாளம் காண நேர்ந்தால், உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளிக்க முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.