கடந்த மார்ச் 20ஆம் தேதி சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது இல்ல பரிசுகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வரும் செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மேலும், இந்த உரிமை தொகையானது தகுதியின் அடிப்படையில் தான் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. தேர்தல் வாக்குறுதியின் போது அனைவருக்கும் உரிமை தொகை வழங்குவதாக தெரிவித்து இப்போது தகுதியின் அடிப்படையில் வழங்கப்படும் என்று பட்ஜெட் வெளியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
இந்த நிலையில் மகளிருக்கான உரிமைத் தொகை குறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உரியவர்களுக்கு மட்டுமே ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் குடிசை மாற்று வாரியத்தில் இருக்கும் அனைவருக்கும் 100 சதவீதம் உரிமைத்தொகை கிடைக்கும். மேலும், ஏழை எளிய மக்களுக்கு மகளிருக்கான உரிமை தொகை வழங்கப்படும்.
ஆனால், வரி செலுத்துவோர் மற்றும் வசதி வாய்ப்பு உள்ளவர்களுக்கு வழங்கப்படாது என அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக திமுக தேர்தல் அறிக்கையில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.