அண்ணாமலைக்கு இடியை இறக்கிய டெல்லி; முடிவுக்கு வந்த கூட்டணி குழப்பம்?

அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதை விரும்பவில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ள நிலையில் பாஜக மூத்த தலைவர்கள் முரணான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இன்று மதுரையில் செய்தியாளர்கள் சந்தித்த ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் தமிழக மீனவர்கள் – இலங்கை கடற்படை பிரச்சைனைகளை கண்காணித்து வருகிறோம் என தெரிவித்தார்.

ஒன்றிய அமைச்சர் உறுதி

மேலும், தமிழக மீனவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ராகுல் காந்தி விவகாரத்தில் எந்தவித காழ்ப்புணர்ச்சியும் இல்லை என்றும் நீதித்துறை சுதந்திரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறினார். மேலும், பாஜக -அதிமுக-வில் எந்த விரிசலும் இல்லை என்றும் கூட்டணி இப்போதும் தொடர்ந்து கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

அதேபோல இன்று மதுரையில் பாஜக மூத்த தலைவருமான எச்.ராஜாவின் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அப்போது அவர் கூறுகையில், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் புழுகு மூட்டையாக உள்ளது என்றார். கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் இன்னும் செயல்படுத்தவில்லை, திமுக மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று வருகிறது, தமிழக அரசு மத்திய அரசின் திட்டங்களை தங்கள் திட்டங்கள் என கூறி வருகிறது என குற்றம் சாட்டினார்.

அதானியால் யாருக்கு நஷ்டம்?

திமுகவில் தடி எடுத்தவன் ‘;தண்டல்காரனா’ இருக்கிறான். திமுக கட்சியும், அமைச்சர்களும், குடும்பமும் என எதுவுமே ஸ்டாலினின் கண்ட்ரோலில் இல்லை என அவர் கூறினார். மேலும், அதானி குழுமத்தால் யாருக்கு என்ன நஷ்டம் வந்துள்ளது என கேள்வி எழுப்பிய எச். ராஜா அதானியால் ஒரு பொதுத்துறை வங்கியாவது பாதிக்கப்பட்டதா? ராகுல்காந்தி நல்ல மனநிலையில் எப்போதும் பேச மாட்டார். ராகுல்காந்திக்கு எதிராக தீர்ப்பு வந்ததால் அவரது எம்.பி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளது என கூறினார்.

மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக வழக்கின் தீர்ப்பு வந்தால் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்ற தீர்ப்பு தெரிவித்தள்ளது என எச். ராஜா சுட்டிக்காட்டினார். அதிமுக கூட்டணி குறித்து பதிலளித்த எச். ராஜா தமிழகத்தில் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்ய டெல்லியில் குழு உள்ளது என்றும் அந்த குழுவே தேர்தல் கூட்டணியை முடிவு செய்யும் என்றார். ஆனால், அண்ணாமலை தனி பாஜக என்ற கோட்பாட்டில் தமிழகத்தில் சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.