ஜேர்மனியின் ஹாம்பர்க்கில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜேர்மனியில் துப்பாக்கிச்சூடு
ஜேர்மனியின் ஹாம்பர்க்கில்(Hamburg) நள்ளிரவுக்கு சற்றுமுன் துப்பாக்கி சூடு சம்பவம் அரங்கேறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை ஹாம்பர்க்கில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்து இருப்பதாக ஜேர்மனியின் பில்ட் செய்தித்தாள் தகவல் வெளியிட்டுள்ளது
Reuters
இதற்கிடையில் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நள்ளிரவுக்கு சற்று முன்பு பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்க பட்டதாகவும், அதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு 28 வாகனங்களில் பொலிஸார் விரைந்து சென்றதாகவும் பில்ட் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
இரண்டாவது சம்பவம்
ஜேர்மனியின் ஹாம்பர்க்கில் அரங்கேறி இருக்கும் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் இந்த மாதத்தில் இரண்டாவது சம்பவமாகும்.
AP
இதற்கு முன்னதாக இந்த மாத தொடக்கத்தில், ஹாம்பர்க்கில் உள்ள யெகோவாவின் சாட்சிகள் மையத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியது.
அதில் துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும் நபர் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.