அதிமுகவில் நடைபெற்று வரும் உட்கட்சி பூசலால் நீதிமன்றத்தில்
,
இடையிலான சட்டப் போராட்டம் தொடர் கதையாகி விட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு தீர்மானம் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு எதிரான வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. கடந்த 24ஆம் தேதி ஓபிஎஸ் தரப்பில் எழுத்துப்பூர்வ வாதம் முன்வைக்கப்பட்டது.
போட்டியிட தயார்
முன்னதாக 22ஆம் தேதி நடந்த விசாரணையின் போது எடப்பாடி தரப்பு அத்துமீறி நடந்துள்ளது. திமுக உடன் நெருக்கமாக இருப்பதாக கூறி என்னை கட்சியை விட்டு நீக்கி விட்டனர். அதிமுகவின் நிபந்தனைகளை நீக்கினால் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட தயார் என ஓபிஎஸ் தரப்பு வாதிட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் மயிலாடுதுறையில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.
ஓபிஎஸ் பல்டி
அப்போது, நீதிமன்றத்தில் உங்களின் நிலைப்பாடு மாறியிருக்கிறதே. பொதுச் செயலாளர் தேர்தலுக்கு போட்டியிடுவதாக தெரிவித்துள்ளீர்களே? எனக் கேட்கப்பட்டது. அதற்கு, யார் சொன்னது? நாங்க ஒன்றுமே சொல்லவில்லை. எடப்பாடி தரப்பினர் தான் அப்படி பேசியுள்ளதாக தெரிவித்தார். மேலும் பேசுகையில், எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால் கழகம் வெற்றி பெறும்.
விதிகள் திருத்தம்
சாதாரண தொண்டன் கூட கழகத்தின் உச்சபட்ச பதவிக்கு போட்டியிடலாம். ஆனால் அவர்கள் விதியை மாற்றி 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டும். 10 மாவட்ட செயலாளர் வழிமொழிய வேண்டும் என்று சட்டத்தை திருத்தியுள்ளனர். அதுதான் கூடாது என்கிறோம். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சி தலைவி ஜெயலலிதா ஆகியோர் 50 ஆண்டுகாலம் கழகத்தை சட்ட விதிப்படி வழிநடத்தி வந்தார்கள்.
அதிமுக சட்ட விதிகள்
முழுமையான வெற்றி பெற்று தமிழகத்தில் ஆளுகின்ற உரிமை பெற்ற கட்சி அதிமுக என்ற நிலையை உருவாக்கி இருக்கிறார்கள். அதைத் தான் நாங்கள் வலியுறுத்துகிறோம். கழகத்தின் சட்ட விதிப்படி புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கும், ஏற்கனவே உறுப்பினர்களாக இருப்பவர்களை புதுப்பிக்கவும் வேண்டும். இருக்கின்ற அனைத்து கிளை கழகங்களிலும் புதிய உறுப்பினர் படிவங்கள் அளிக்கப்பட வேண்டும்.
அமைப்பு ரீதியில் தேர்தல்
அவரவர் உறுப்பினர் படிவங்களை பூர்த்தி செய்து தலைமை கழகத்தில் கொடுக்க வேண்டும். அதன்பிறகு கழகத்தின் விதிப்படி சம்பந்தப்பட்ட நபர்களுக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட வேண்டும். இதன் தொடர்ச்சியாக கழகத்தில் அமைப்பு ரீதியிலான தேர்தல் ஜனநாயக முறைப்படி வாக்களித்து நடத்தப்பட வேண்டும்.
இப்படி செய்தால் கீழ் நிலையில் உள்ள தொண்டர்கள் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்று சூழ்நிலை உருவாகும். அந்த நிலை தான் புரட்சி தலைவர் காலந்தொட்டு புரட்சி தலைவி காலம் வரை இருந்தது. அதை மாற்றி இருக்கிறார்கள். மாற்றக் கூடாது என சொல்லியிருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.